தமிழகத்தில் மகளிர் குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம் – திமுக அரசின் ஓராண்டு சாதனை! முதல்வர் பெருமிதம்!!

0
தமிழகத்தில் மகளிர் குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம் - திமுக அரசின் ஓராண்டு சாதனை! முதல்வர் பெருமிதம்!!
தமிழகத்தில் மகளிர் குழு கடன் தள்ளுபடி, இலவச பஸ் பயணம் - திமுக அரசின் ஓராண்டு சாதனை! முதல்வர் பெருமிதம்!!

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று, ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அரசு நிறைவேற்றியுள்ள சாதனைகள் குறித்த பதிவுகள், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஓராண்டு சாதனைகள்:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக 125 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வர் ஸ்டாலினுடன், 33 அமைச்சர்கள் கடந்த வருடம் மே 7ஆம் தேதி பதவி ஏற்றனர். தற்போது திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அரசு கொண்டு வந்துள்ள ஓராண்டு சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பாக 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டுள்ளது. பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, மகளிருக்கு இலவச பயணம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகுதல், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், கோயில் நிலங்கள் மீட்பு, ஐந்து வயது சிறுவர் சிறுமிகளுக்கு இலவச பயணம் என பலவித அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் - அடுக்கடுக்காய் எழுந்த குற்றச்சாட்டு! அமைச்சர் விளக்கம்!!

இதுபோக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி ஊதிய உயர்வு, கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி திட்டம், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் அமல் படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்த அறிவிப்புகள் வெளியாகி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here