தமிழக அரசு பணிகளின் இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தம் – சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி உத்தரவு!!

0
government employees
தமிழக அரசு பணிகளின் இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தம் - சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில், அரசு பணிகளுக்கான இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

தமிழக அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன்படி, பெண்களுக்கு 30 சதவீதம், மீதமுள்ள 70 சதவீத இடங்களில் பொதுப் பிரிவு என பிரிக்கப்பட்டது. இந்த பொது பிரிவில் பெண்களும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி அரசுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதலில், 30% பெண் இட ஒதுக்கீட்டை முடித்துவிட்டு, அதன் பின் பொது பிரிவுக்கு இட ஒதுக்கீடு செய்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என குறிப்பிட்ட நீதிபதிகள், முதலில் பொதுப் பிரிவை முடித்துவிட்டு, அதன் பிறகு சமூக ரீதியிலான இட ஒதுக்கீட்டை நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

no reservation for government doctors for pg

அதில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு பூர்த்தியாகவில்லை என்பதை பார்த்து, அத்தனை இடங்களை மட்டும் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, இட ஒதுக்கீட்டு விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here