மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக முதல்வர்…, அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பிப்பு!!

0
மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக முதல்வர்..., அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பிப்பு!!
மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உயர்த்திய தமிழக முதல்வர்..., அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பிப்பு!!

தமிழக அரசானது, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக செய்யப்படுத்த நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த வகையில், காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு தலா ரூ. 25,000 விதம் 100 மாணவர்களை தேர்வு செய்து 4 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை தற்போது, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, ஆண்டுக்கு தலா ரூ. 30,000 விதம் 200 மாணவர்களை தேர்வு செய்து 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அனைத்தும் உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதற்காக 2.40 கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 9 காவல்‌ ஆணையரகங்கள் மற்றும்‌ 37 காவல்‌ மாவட்டங்களில் பணிபுரியும்‌ காவலர்களின்‌ குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசு தொகையை ரூ. 28.29 லட்சத்தில் இருந்து 56.58 லட்சமாக உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்களே அலர்ட்.., அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.., வானிலை மையம் பகீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here