தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – இனி இந்த சேவைக்கும் முன்பணம் கட்டாயம்! அரசு உறுதி!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - இனி இந்த சேவைக்கும் முன்பணம் கட்டாயம்! அரசு உறுதி!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - இனி இந்த சேவைக்கும் முன்பணம் கட்டாயம்! அரசு உறுதி!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு, இனி இந்த சேவைக்காக முன்பண தொகை கட்டாயம் வழங்கப்படும் என அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

அரசு உறுதி :

தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்களின் நலனுக்காக அரசு பணிக்கொடை, ஊதிய மற்றும் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அரசு ஊழியர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, அரசின் சார்பாக முன் பணம் அளிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், இதுவரை தமிழக அரசு ஊழியர்களுக்கு இதற்காக ரூ. 6 முதல் 14 லட்சம் வரை முன்பணத் தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, மின்சார வாகனங்கள் வாங்க விரும்பும் அரசு ஊழியர்களுக்கும் இந்த முன் பணத் தொகையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி/கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கால சூழ்நிலைக்கு ஏற்பவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த திட்டத்தை உருவாகியுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து துறையின் பரிந்துரையை ஏற்று, அரசு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்கள் வாங்க முன் பணம் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here