Friday, May 14, 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு !!! – வழக்கு விசாரணை

Must Read

தமிழகத்தில் முழு ஊரடங்கு !!! – வழக்கு விசாரணை

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்ச்சூழலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது . தமிழகத்தில் தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மே 20 வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் பாலாஜிராம் என்பவர் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் இல்லை.

கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளதால், பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்தில் 216 கோடி தடுப்பூசிகள் -நிதி ஆயோக் அறிக்கை!!

இந்தியவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்களில் உற்பத்தி அபாரமாக அதிகரிக்கும் என்று...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -