தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு உதவித் தொகை…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு உதவித் தொகை..., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தின் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால், பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு அரசு சார்பில் வெள்ள நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்ப அட்டைதாரர்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு, துணி பாத்திரங்கள் உள்ளிட்டவை இழந்துள்ளவர்களும் தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் சேர்ந்து வெள்ள நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில்,  5.5 லட்சம் பேர் வெள்ள நிவாரண தொகை பெற விண்ணப்பித்து உள்ளனர். இதில், 2.3 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்த்து வருவாய் பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் மழை நிவாரண தொகை பெறாமல் உள்ள விடுபட்டவர்களின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்து வைத்துள்ளோம். இதனை, தமிழக அரசிடம் ஒப்படைத்து, அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here