தமிழக 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு – தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

0
தமிழக 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு - தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உள்ள செய்முறை தேர்வுகள் அனைத்தும் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகள், பள்ளி மாணவர்களுக்கான இறுதிப் பொதுத் தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு தொற்றின் தாக்கம் குறைந்ததால், மாணவர்களுக்கு வழக்கம் போல் தேர்வுகள் நடத்தப்பட்டது.

இனி வழக்கம் போல் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை உறுதியளித்தது. அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு அடுத்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. இதில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வரும் தேர்விலேயே முழு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போதுதான் அவர்கள் பொது தேர்வுக்கு தயார் செய்வதற்கு சரியாக இருக்கும். அந்த வகையில், மாணவர்களுக்கான இந்த பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ், சில மணி நேரங்களுக்கு முன் வெளியிட்டார். இதன் படி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இதே போல், 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெற உள்ளது.

இது போக, இறுதிப் பொதுத்தேர்வுக்கு முன்பாக, இந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த செய்முறை தேர்வின் மதிப்பெண்களும், இறுதிப் பொதுத் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்து கணக்கிடப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் அனைத்தும், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here