தமிழக விவசாயிகள் கவனத்திற்கு., வேளாண் அமைச்சர் வெளியிட்ட ஜாக்பாட் திட்டம்! விவரங்கள் உள்ளே!!

0
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்.,ரூ.10,000 கோடியில் அரசின் சூப்பர் திட்டம்!!
தமிழக விவசாயிகள் கவனத்திற்கு., வேளாண் அமைச்சர் வெளியிட்ட  ஜாக்பாட் திட்டம்! விவரங்கள் உள்ளே!!

தமிழகத்தில், பயறு வகை தானியங்களை உற்பத்தி செய்துள்ள விவசாயிகள், அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் பயன் அடைய விண்ணப்பிக்குமாறு வேளாண் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழக விவசாயிகளுக்கு, நாள்தோறும் பல புதிய திட்டங்களை  அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இம்மாத இறுதியில்,  தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்


இதன் தொடக்கமாக, உளுந்து மற்றும் பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகை சாகுபடி விவசாயிகள் இந்த விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை  மத்திய அரசு நிர்ணயித்தது.அதன்படி, உளுந்து  ரூபாய் 66 க்கும், பாசி பயறு ரூபாய் 77.55 க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.


தற்போதைய காலம் இந்த பயறு வகை அறுவடை காலம் என்பதால், இத் திட்டத்தில் இணைந்து குறைந்தபட்ச ஆதார  விலை பெற  விரும்பும் விவசாயிகள் தங்கள் ஆதார் மற்றும் பட்டா சிட்டா அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றை  கொடுத்து இதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விரும்பும் விவசாயிகள், உடனே விண்ணப்பித்து 3 நாட்களுக்குள் அதற்கான விலையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here