தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்., மானியத்தில் இயந்திரங்களை வழங்க முடிவு! சூப்பர் திட்டம் வெளியீடு!!

0
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்., மானியத்தில் இயந்திரங்களை வழங்க முடிவு! சூப்பர் திட்டம் வெளியீடு!!
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்., மானியத்தில் இயந்திரங்களை வழங்க முடிவு! சூப்பர் திட்டம் வெளியீடு!!

தமிழக விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக, அவர்களுக்கு பயனளிக்கும் முக்கிய இயந்திரங்களை 40% மானிய விலையில் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

அரசு அறிவிப்பு :

தமிழக விவசாயிகளுக்கு, பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர்கள் விளைவிக்கும் விலை பொருட்களை, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க உதவும், மதிப்பு கூட்டும் இயந்திரங்களை அவர்களுக்கு மானிய விலையில் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்காக நடப்பாண்டில், வேளாண் விளைப் பொருட்களை நீண்ட நாட்கள் வைத்து மதிப்பு கூட்டி அவற்றை சந்தை படுத்த, 292 இயந்திரங்களை விவசாயிகளுக்கு, 40% மானியத்தில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சிறு, குறு விவசாயிகள் உழவன் செயலி அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சிறுகுறி விவசாயிகளுக்கான சான்று, பட்டா சிட்டா நகல் போன்றவற்றை கொடுத்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த திட்டத்திற்கு, அரசின் சார்பாக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட பட்டிருப்பது பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here