தமிழக விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி தகவல்!!

0
தமிழக விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி தகவல்!!
தமிழக விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி தகவல்!!

விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது குறித்த, முக்கிய தகவல் ஒன்றை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழக மின்வாரிய துறை மூலம், பொது மக்களுக்கு மின்சாரம் விநியோக செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம் பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் தமிழக விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்க, மின்சாரத்துறை முடிவு செய்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மின்வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பல புதிய தகவல்களை வெளியிட்டார். அதாவது, அவசரகாலங்களில் மின்வினியோகம் தடைபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக 15 பேர் கொண்ட 720 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

யூடியூப் பயனர்கள் குஷி ., இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல! இதுவரை இல்லாத புதிய அப்டேட் அறிமுகம்!!

மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, கூடுதலாக 11,000 மின்சார பணியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதுபோக, மின்விநியோகத்தில் ஏற்படும் புகார்களை உடனடியாக சரி செய்ய, மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here