பெண் ஐ.பி.எஸ். பாலியல் வழக்கு பொய்., 1 மணி நேரம் வாதாடிய ராஜேஷ் தாஸ்? நீதிபதிகள் அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் சிறப்பு டிஜிபி ஆக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2021ஆம் ஆண்டு புகார் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை பிப்.1 ஆம் தேதி நடைபெற்ற போது, ராஜேஷ் தாஸ் தரப்பு வாதங்களை நிரூபிக்க அவரே வாதிட்டார். அப்போது இது பொய் வழக்கு என்பதை நிரூபிக்க, ஒரு மணி நேரம் வாதிட்டார். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை தினமும் பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட வேண்டும் என நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here