தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு!.,, அதிகாலையில் பெரும் பரபரப்பு!!

0

தமிழகத்தில், முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் தொடர்புடைய முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை, அதிகாலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

அதிரடி ரெய்டு:

தமிழகத்தில், தனியார் மருத்துவமனை விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவது ,தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான கோவை சுகுணாபுரம், தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது கிராமப்புறங்களில் தெருவிளக்குகளை எல் இ டி விளக்குகளாக மாற்றியதில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தேசிய மருத்துவ குழு விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி.விஜயபாஸ்கர் சான்று தந்தாக புகார் எழுந்துள்ளது.


இந்த வகையில் வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது தற்போது 3வது முறையாக இந்த சோதனை நடைபெறுகிறது. சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் தற்போது 2வது முறையாக சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here