தமிழகத்தில் இவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பே இல்லை., அரசு திட்டவட்டம்!!

0
தமிழகத்தில் இவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பே இல்லை., அரசு திட்டவட்டம்!!
தமிழகத்தில் இவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பே இல்லை., அரசு திட்டவட்டம்!!

தமிழகத்தில் உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

அரசு உறுதி:

நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின் போது உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும், சட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், இது குறித்த முக்கிய தீர்மானம் ஒன்று தமிழக சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில், இது குறித்த முக்கிய முடிவு ஒன்றை தமிழக அரசு இடம்பெற செய்திருந்தது.

மீண்டும் ” தமிழ்நாடு” என்பதை தவிர்த்த ஆளுநர்., பொங்கல் அழைப்பிதழால் வெடித்த சர்ச்சை!!

அதாவது உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கை சமூக நீதிக்கு எதிராக இருப்பதால், அதை இங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதை ஆளுநர் உரையில் இடம்பெற செய்து, இந்த இட ஒதுக்கீட்டுக்கான எதிர்ப்பை தமிழக அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here