தமிழக பொறியியல் படிப்பு கலந்தாய்வு 2020 – ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!

0
kp-anbalagan
kp-anbalagan

தமிழகத்தில் இந்த வருட பொறியியல் படிப்பு கலந்தாய்வுகளில் பங்கேற்க இன்று மாலை 6 மணிமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து உள்ளார். அதற்கான இணையதள முகவரியும் வெளியிடப்பட்டு உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த வருட கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகி உள்ளது. மாணவர்களின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படாத காரணத்தால் கலந்தாய்வு தள்ளிப்போகி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர் கலெக்டருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

Counselling
Counselling

இன்று மாலை 6 மணிமுதல் மாணவர்கள் http://tneaonline.in என்கிற இணையதளத்தில் மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 465 பொறியியல் கல்லூரிகளுக்கு கலந்தாய்வில் விண்ணப்பிக்கலாம். 16.8 .2020 மாலை 6 மணிவரை இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்ப கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here