
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் இருந்து மட்டும் தமிழகத்தில் 4,074 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொது சுகாதாரத் துறையானது பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த வகையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, 5 நாட்களுக்கும் மேல் கடுமையாக காய்ச்சல் இருந்தால் எலிசா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசோதனையானது, ஒரு நபர் வைரஸ்கள் அல்லது நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பிற பொருட்களுக்கு ஆளாகியிருக்கிறாரா என்பதை கண்டறிவது ஆகும்.
நம்ப வச்சு கழுத்தை அறுத்த அட்லீ.., மனவேதனையுடன் பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்!!