
தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், தகுதியானவர்களின் பட்டியல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) திட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் இத்திட்டத்திற்காக 1.63 கோடி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக உள்ளனர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் திட்ட அதிகாரிகளுக்கு ஒரு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். அதன்படி “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய விளக்கங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான அனைவருக்கும் ATM கார்டு படிப்படியாக வழங்கப்படும். அதுவரை பயனாளிகளுக்கு பணம் எடுக்க எவ்வித சிக்கல்களும் ஏற்பட கூடாது. மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதில் எவ்வித சிறு தவறுகளும் ஏற்பட்டு அவப்பெயர் உண்டாக்க கூடாது.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்., அகவிலைப்படியை விடுங்க? முதல்ல பதவி உயர்வு வாங்கிக்கங்க!!!