தமிழக அரசானது வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை சமீபத்தில் உயர்த்தியது. மின்சாரத்தை மையமாக கொண்டு செயல்படும் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு இந்த கட்டண உயர்வானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, திருப்பூர், கோவை மாவட்ட வணிக நிர்வாகிகள் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானிடம் மனு அளித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் உள்ள காரணம்பேட்டையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் மின் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட், கொரியர் மூலம் மனு அனுப்பவும், அடுத்த நாள் (25 ஆம் தேதி) தொழில் நிறுவனங்களில் கதவடைப்பு செய்து, கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Rupay கார்டு பயனாளர்களே., SBI அறிமுகம் செய்த அப்டேட் வெர்ஷன்., ஜாக்பாட் தகவல்!!!