தமிழக களப்பணியாளர்களே…, உங்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி…, மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!! 

0
தமிழக களப்பணியாளர்களே..., உங்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி..., மின்வாரியத்துறையின் அதிரடி நடவடிக்கை!! 

இன்றைய நவீன காலகட்டத்தில் மின்சாரத்தின் தேவை அறிந்து தமிழக மின்வாரிய துறையானது, மின்சாரத்தை சேமிப்பதற்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை கண்காணிப்பதற்காக அரசு சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.

அதாவது, மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், மின் இணைப்பை துண்டித்தல், மீண்டும் இணைப்பு வழங்குதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் நுகர்வோர் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட களபணிகளில் ஈடுபடும் பணியாளர்களை கண்காணிப்பதற்கான செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கான சோதனை ஓட்டத்திற்கு மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதே அடுத்து முதலில் 12 வட்ட அலுவலகங்களில் உள்ள மேலாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக செயலியின் ஏபிகே வழங்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

எக்ஸ்ட்ரா காசு கேட்ட டாஸ்மாக் விற்பனையாளர்.., வாக்குவாதத்தில் ஈடுபட்ட மது பிரியர்.., வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here