தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் அதிரடி விளக்கம்!!

0
தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் அதிரடி விளக்கம்!!
தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற பயனர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா? என்பது குறித்த விளக்கத்தை, மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகத்தில் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம், மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. புதிய கட்டணத்தின் அடிப்படையில் மின் கணக்கீடு, செய்யப்பட்டு தற்போது கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் வழக்கம் போல் நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், 100 யூனிட்டுக்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில், இலவச மின்சாரம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதாவது, இலவச மின்சாரம் பெறும் பயனர்கள் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது ஒரு செயல்முறை மட்டும்தான்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(21.11.2022) – முழு விவரம் உள்ளே!!

இந்த இணைப்பை செய்து முடிப்பவர்களுக்கு மட்டும் தான் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது தேவையற்ற வதந்தி. அதை நம்பி பொதுமக்கள் யாரும், ஏமாற வேண்டாம் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சரின் இந்த விளக்கத்தால், இலவச மின் இணைப்பு பெறும் பயனர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here