தமிழகத்தில் நாளை மின் ஊழியர்கள் முழு நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திடீரென இதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் தடை :
தமிழகத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்ட்டிருந்தது. இது குறித்த வாதம் இன்று நடைபெற்ற நிலையில், ஏற்கனவே மின் ஊழிய சங்கப் பிரதிநிதிகள் உடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த துவங்கி விட்டதால், ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தொடர்ந்து இது போன்ற போராட்டங்களுக்கு, 2 வாரங்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்பதால், இந்தப் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
வாடிக்கையாளர் வங்கிக்கு செல்ல கூடாது., இனி ஆன்லைனில் இந்த முறை தொடரும்.., RBI அதிரடி அறிவிப்பு!!
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மின் ஊழியர்களின் இந்தப் போராட்டத்தால் ஆவின் பால் விநியோகம், மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் பாதிக்கப்படும் என்றும், தொழிற்சங்க தகராறு சட்டத்தின்படி பேச்சுவார்த்தை நடக்கும் போது போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பது சட்டத்திற்கு முரணானது என கூறி இதற்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.