தமிழகத்தில் 10% வரை குறைக்கப்பட்ட மின் கட்டணம்., பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி – அரசு அதிரடி!!

0
தமிழகத்தில் 10% வரை குறைக்கப்பட்ட மின் கட்டணம்., பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி - அரசு அதிரடி!!
தமிழகத்தில் 10% வரை குறைக்கப்பட்ட மின் கட்டணம்., பயனர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி - அரசு அதிரடி!!

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ள நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 10 சதவீதம் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் மூலம் புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டாலும், அடுத்தடுத்த அளவைகளுக்கான கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு சாமானிய மக்களிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது போக, பொது சேவைக்காக பயன்படுத்தப்படும் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக பலரும் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். அதன்படி மாதம், ரூபாய் 1000 க்கும் கீழ் கட்டி வந்த கட்டணம், இப்போது 4000க்கும் மேலாகிவிட்டது என ஆதங்கப்பட்டு வந்தனர்.

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள்..,, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 10% குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது போக குறைந்த மின் இணைப்பு வசதி கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு 25 % லிருந்து 15 சதவீதமாக குறைக்க படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here