தமிழகத்தில் இம்மாதம் முதல் உயரும் மின் கட்டணம்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
தமிழகத்தில் இம்மாதம் முதல் உயரும் மின் கட்டணம்..., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் இம்மாதம் முதல் உயரும் மின் கட்டணம்..., வெளியான அதிர்ச்சி தகவல்!!

இன்றைய காலக்கட்டத்தில் பிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட பல மின் சாதனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், தமிழக அரசானது சீரான மின்சாரத்தை சிறப்பாக வழங்கி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழக மின் வாரியமானது, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து வீடுகளிலும், தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் என கூடுதல் வைப்பு தொகையை வசூலித்து வருகிறது. இதில், 2021ம் ஆண்டில் கொரானாவால் அனைத்து குடும்பங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால், கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதை அந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கைவிடப்பட்டது.

வசீகர அழகில் ராணியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய்., பாலோவ் பண்ணும் பியூட்டி டிப்ஸ் இதுதானாம் ??

இதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற விதியின் படி வீடுதோறும் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதல் வைப்பு தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மின் கட்டணத்தை உயர்த்தி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், வைப்பு தொகையை வசூலிப்பதை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தது. இதன்படி, இம்மாதம் முதல் மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகைக்கான விபரமும் ரசீதில் குறிப்பிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் மின் வாரியமானது, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here