தமிழக சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு!!

0

இன்று தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்தான முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் இந்த நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துதல், வேட்புமனுக்களை சமர்ப்பித்தல், பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் என்று அனைத்து வித பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. கட்சிகள் ஒரு பக்கம் இது போல செயல்பட்டாலும், இந்தியாவின் தேர்தல் ஆணையம் தங்களுக்கான பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது.

‘சின்ன பொட்டிக்கடைய வச்சிக்கிட்டு என்ன சீன் போடுறீங்க’ – ஜீவாவை கண்டபடி திட்டும் ஜனார்த்தனன்!!

ECI Deploys Central Force in WB Ahead Of Election - eBanglaகடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மார்ச் 12 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்பட்டது. அதே போல் தேர்தலில் போட்டியிட இருக்கும் கட்சிகளின் அதிகாரப்பூர்வ பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் தமிழகத்தில் மட்டும் மொத்தமாக 7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 4,526 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு, தேர்தலில் போட்டியிட விரும்பாதோர் தங்களது மனுக்களை திரும்ப பெற்றுதல் ஆகியவை நிறைவடைந்ததும் இன்று மாலை முழுமையான வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதே போல் சுயேச்சைகளுக்கான தனி சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here