தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த கல்வித்துறை – உடனே இதை அனுப்ப வேண்டும் என அதிரடி!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செக் வைத்த கல்வித்துறை - உடனே இதை அனுப்ப வேண்டும் என அதிரடி!!

தமிழக அரசு பள்ளிகளின், கல்வி தரத்தை உயர்த்த அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,கல்வித்துறை முக்கிய உத்தரவு ஓன்று பிறப்பித்துள்ளது.

அதிரடி உத்தரவு:

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல வகையான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் இல்லந்தேடி கல்வி திட்டம், 1 முதல் 3ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் கல்வி என்ற திட்டம் துவங்கப்பட்டு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. இதை தொடர்ந்து ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் பேரில், பள்ளிகளில் ஆசிரியர்கள் நாள்தோறும் நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகின்றனவா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இதை தொடர்ந்து மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி, பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க திட்டம் – 16 இடங்களில் குண்டு பறக்கும்! போலீசுக்கு பகிரங்க எச்சரிக்கை!!

இதுமட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர்கள் அவருடைய பாடவேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை 50 முதல் 60% வரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here