தமிழக மின் நுகர்வோருக்கு அதிர்ச்சி செய்தி.., தேர்தலுக்கு பின் மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக மின் நுகர்வோருக்கு அதிர்ச்சி செய்தி.., தேர்தலுக்கு பின் மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின் தற்போது வரை மின் கட்டணத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்குப் பின் மின் கட்டணத்தில் அதிரடி மாற்றம் நிகழ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தேர்தல் முடிந்த பிறகு மின் கட்டணத்துடன் சேர்த்து மின் காப்பு தொகையும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மின் காப்புத்தொகை என்னவென்றால் அனைத்து நுகர்வோரும் மே மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பயன்படுத்திய மின் கட்டணத்தில் மாத சராசரி கணக்கிடப்பட்டு மூன்று மாதங்களுக்கான தொகை தான் புதிய காப்பு தொகையாக கணக்கிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மின் நுகர்வோர் கட்ட வரும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் கூடுதல் காப்பு தொகையும் வசூலிப்பது மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here