தமிழக குடிநீர் லாரிகள் சங்கம் காலவரையற்ற ஸ்டிரைக் – திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் ஷாக்!!

0
தமிழக குடிநீர் லாரிகள் சங்கம் காலவரையற்ற ஸ்டிரைக் - திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் ஷாக்!!

தமிழகத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் வருகிற 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.

தலைவர் அறிவிப்பு:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பல இடங்களுக்கு குடிநீர், லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கும், குழாய் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட முடியாத பகுதிகளுக்கும் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது இந்த லாரிகள் சங்கம், வருகிற நவம்பர் 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. லாரிகளில் குடிநீர் எடுக்க உரிமம் மறுப்பது, தேவையில்லாமல் லாரிகளை சிறை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து, வரும் திங்கட்கிழமை முதல் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக , அனைத்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஐ.டி ஊழியர்களுக்கு ஷாக்.,, Infosys நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் நிஜலிங்கம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here