இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவரின் தற்போதைய பெறும் எதிர்பார்ப்பாக இருப்பது தீபாவளி பண்டிகை தான். இந்த தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவுள்ள இந்த பண்டிகைக்கு தமிழக அரசானது பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கும் என்பதை பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, நவம்பர் 11 சனிக்கிழமை வாரத்தின் இறுதி நாள் என்பதால் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து, நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை கொண்டாடிய பிறகு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் நவம்பர் 13 (திங்கட்கிழமை) விடுமுறையை அரசு அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை விடுமுறை அளித்தால், நவம்பர் 11 முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வழங்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை எதிரொலி.., மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சிக்கல்.., வெளியான ஷாக் நியூஸ்!!!