நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது தீபாவளி பண்டிகையை எதிர்பார்த்து உள்ளனர். இந்த பண்டிகைக்கு பொதுவாக மக்கள், தெய்வ வழிபாடு செய்து, அண்டை வீட்டாருக்கு இனிப்புகள் வழங்கி, மகிழ்ச்சியுடன் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவர். இனிப்புகளை சிலர் வீட்டிலேயே தயாரிப்பார்கள். ஆனால், பெரும்பாலானோர் கடைகளில் வாங்கி கொள்வது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், உணவு பாதுகாப்பு துறையானது இனிப்புகளை தயாரித்து வழங்கும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, உணவு தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று இருக்க வேண்டும். உரிமம் இல்லாமல் தீபாவளி இனிப்புகளை தயாரித்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு போட்டி தேர்வு இல்லை? வெளியான அதிரடி தகவல்!!!!