தமிழகத்தில் இந்த துறை சார்ந்த பதவிக்கு இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த துறை சார்ந்த பதவிக்கு இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் இந்த துறை சார்ந்த பதவிக்கு இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழக பத்திரப்பதிவு துறையில், குறிப்பிட்ட ஒரு பதவிக்கான உரிமம் பெறுவதற்கு, இனி சிறப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

தமிழகத்தில் இடங்களுக்கான பட்டா, வில்லங்க சான்று மற்றும் சொத்து குறித்த சான்று ஆகியவைகளை மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், சொத்து சார்ந்த சில ஆவணங்களை பெற புதிய விதிமுறைகளை பத்திர பதிவுத்துறை அதிரடியாக வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது, பதிவுத்துறை அரசு செயலர் ஜோதி நிர்மலா சாமி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அவர் தெரிவித்ததாவது, இதுவரை பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் அரசால் வழங்கப்படவில்லை. தற்போது, பதிவுத்துறை ஆவண எழுத்தர் உரிமம் பெற, இனி சிறப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு இந்த உரிமம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனத்தில் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு.,, சூப்பரான அறிவிப்பு வெளியீடு!!

இதனால் 20 ஆயிரம் நபர்கள் பயன் பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடிப்படையில் மாநிலம் முழுவதும் இந்த உரிமத்திற்கான தகுதி தேர்வை பதிவுத்துறை தலைவர் நடத்த வேண்டும் என்றும், இதற்கான தேர்வு கட்டணங்களையும் அவரே நிர்ணயிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தேர்வை எழுத அதிகபட்ச வயது வரம்பு 55 எனவும், இந்த வயது வரம்பு பட்டியல் பிரிவு வாரியாக வேறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் உரிமம் வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here