தமிழகத்தில் குடியிருப்பு, விவசாயம், வணிகம், தொழில் ஆகிய நிலங்களுக்கான பத்திரப்பதிவு அரசு பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் குடியிருப்பு நிலங்கள் வணிக பகுதி நிலமாக மாற்றப்படும் போது இரு நில வகைகளின் குறைந்த பட்ச மதிப்பில் வேறுபாடு இருக்கிறது. இதனால் பெரும்பாலான அலுவலகத்தில் பத்திரப்பதிவின்போது பல்வேறு குழப்பம் ஏற்படுவதாக பதிவாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் கொண்டு புதிய வரைவு மதிப்புகளை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வணிக மனைகளுக்கான குறைந்தபட்ச மதிப்பு 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து மக்களிடம் கருத்து பெற்று தான் சீரமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மளமளவென குறைந்த வெங்காயத்தின் விலை.., ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? சந்தோஷத்தில் மக்கள்!!