தமிழகத்தில் கொரோனா புது உச்சம் – பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

0
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா புது உச்சம் - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? ஸ்டாலின் அவசர ஆலோசனை!!

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அதிரடி தகவல் :

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் வைரஸ் பரவல் புது உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு கீழ் மட்டுமே பதிவாகி வந்த நிலையில், நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 219 பேருக்கு பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை அடுத்து மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகுமோ? என்று பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here