
தமிழக அரசானது, அனைத்து மாவட்டங்களையும் தூய்மையாக வைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்தின் தலைநகர் சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பது, கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு என அனைத்திற்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவ்வாறு, குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை உரிய இடத்தில் கொட்டாமல் விதியை மீறி பொது இடங்களில் கொட்டினால் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் விதியை மீறி சென்னையின் பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டியவர்களிடமிருந்து ரூ. 1.87 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.