Thursday, June 24, 2021

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து – அரசாணை வெளியீடு!!

Must Read

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விபரங்களும் அளிக்கப்பட்டு உள்ளன.

செமஸ்டர் தேர்வுகள் ரத்து:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் பள்ளித் தேர்வுகளைப் போல் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை பரிசீலித்த தமிழக அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் உட்பட அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் இந்த பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வுகள் இன்றி அடுத்த கல்வியாண்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. இது குறித்து யுஜிசி எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு கடந்த பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை வைத்து 30% கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீத மதிப்பெண்கள் யுஜிசி மற்றும் AICTE வழிகாட்டுதல்கள் படி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் ராஜாராணி நடிகர் – ஒருவேளை ;சொந்தக்காரங்களா இருப்பாங்களோ??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோவின் தம்பியாக நடித்து வரும் பாலாஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து எடுத்த புகைப்படம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -