ஏப்.1 முதல் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் – தமிழக முதல்வர் அதிரடி!!

0

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்முனை மின்சாரம்:

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மக்களுக்கு நன்மை தரும் வகையில் பல திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து மற்றொரு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக முதல்வர் இன்று சேலத்தில் உள்ள திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரி நீர் திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்பின்பு பேசிய தமிழக முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் பேசிய அவர் கடந்த 5 ஆண்டில் இரண்டு முறை விவசாய கடனை ரத்து செய்தது அதிமுக அரசு தான் என்று சுட்டிக்காட்டினார். மேலும் தற்போது திறந்து விடப்பட்ட உபரிநீரும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான், என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here