ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டம் – முதல்வர் துவக்கிவைப்பு!!

0

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ரேசன் கடைகளில் இலவச முக கவசம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முககவசங்கள் வழங்க பரிசீலிக்கப்படுவதாக கூறினார்.

தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். எனவே இந்த முககவசங்களை எவ்வளவு விலையில் கொள்முதல் செய்வது என்பதை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அரசு அமைத்தது.

சாத்தான்குளம் விவகாரம் – ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர்..!

இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here