நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இந்த வகையில், 13 வது சீசனுக்கான உலக கோப்பை தொடர் நடப்பு வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடருக்கான உலக கோப்பை டிராபி, கடந்த மாதங்கள் உலகம் முழுவதும் சுற்றி வந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் வலம் வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது, இந்த உலக கோப்பைக்கான டிராபி சென்னையை வந்தடைந்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த உலகக்கோப்பையை தமிழக முதல்வர் கண்டு களித்து, போட்டோ ஒன்றையும் எடுத்துள்ளார். உலக கோப்பை டிராபி உடன் இவர் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்தியா வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
#INDIA will win! #CWC2023 pic.twitter.com/cbzpM651zl
— M.K.Stalin (@mkstalin) September 16, 2023