‘அந்த தருணம் நெஞ்சில் நினைவிருக்கிறது’….,மனோபாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்…..,

0
'அந்த தருணம் நெஞ்சில் நினைவிருக்கிறது'....,மனோபாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்.....,
'அந்த தருணம் நெஞ்சில் நினைவிருக்கிறது'....,மனோபாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்.....,

தமிழ்திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனருமான மனோபாலா இன்று (மே 3) இயற்கை எய்தினார். தற்போது 69 வயதான மனோபாலா வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திடீரென மரணமடைந்துள்ள செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் விஜய், ஆர்யா, சித்தார்த் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் நேரடியாக சென்று நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செய்தனர். இப்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மனோபாலாவின் மறைவுக்கு தனது இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

IPL 2023: டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு…..,

இந்த பதிவில், ‘திரைப்பட நடிகர் மனோபாலா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சிறந்த நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்த மனோபாலாவின் மறைவு ஒருவராலும் ஈடுசெய்ய முடியாது. எனது பிறந்தநாளை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு அவர் பாராட்டியது என் நெஞ்சில் நிழலாடுகிறது’ என நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here