தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை பற்றி முக்கிய அறிக்கை வெளியீடு – மருத்துவமனை தகவல்!!

0
மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்..
தமிழகத்தில் இனி இந்த பிரச்சனைக்கு வாய்ப்பில்லை - முதல்வர் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை :

கடந்த ஜூலை 12ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ட்விட்டரில் வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து, ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று சிடி ஸ்கேன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் - அதிர்ச்சியில் தமிழக மக்கள்!

இந்த நிலையில் தற்போது அவர் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல்வர் உடல்நலம் தேறி வருவதாகவும் ஆனால் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். இது போக முதல்வர் கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள், தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here