ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு கொடுத்த கௌரவம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

0
ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு கொடுத்த கௌரவம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!
ராஜராஜ சோழனுக்கு தமிழக அரசு கொடுத்த கௌரவம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னரான ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஸ்டாலின் அறிவிப்பு:

சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய அரசராக விளங்கியவர் மாமன்னர் ராஜராஜ சோழன். தஞ்சாவூரில் அவர் கட்டிய, தஞ்சை பெருவுடையார் கோவில் இன்றளவும் தமிழ் மக்களின் பெருமையைச் சுமந்து கம்பீரமாக நிற்கிறது. சமீபத்தில் இவர் வரலாற்றைச் சொல்லும், பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வெளியானது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான 1037 வது சதய விழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று, இவருக்கான சிறப்பு அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அட்ரா சக்க.,3 மாதங்கள் வரை கெட்டுப்போகாத பால் பாக்கெட்டுகள் – ஆவின் நிறுவனத்தின் சூப்பர் அறிமுகம்!!

அதாவது, இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இது போக தஞ்சாவூரில் உள்ள, அவரது மணிமண்டபம் பொலிவூட்டப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஸ்டாலினின் அறிவிப்பை, அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வரவேற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here