தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? இன்று மாலை முதல்வர் உரை!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காலை ஆலோசனை நடத்திய நிலையில் மாலை 5 மணிக்கு மாநில மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதில் ஊரடங்கு நீட்டிப்பது அல்லது தளர்வுகள் வழங்குவது குறித்து சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் உரை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. இந்திய அளவில் 2வது இடத்தில தமிழகம் உள்ளது. இதுவரை 2.20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவுள்ளது. இதனால் ஜூலை 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் வழங்குவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

ஆகஸ்ட் 16 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து சில தகவல்களை முதல்வர் கூறினார். தமிழகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. நாளை மருத்துவக்குழுவுடன் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here