மக்களுடன் மக்களாக மாஸ் நடனமாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
மக்களுடன் மக்களாக மாஸ் நடனமாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
மக்களுடன் மக்களாக மாஸ் நடனமாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

3 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக நீலகிரி சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அங்குள்ள தோடர் இன மக்களுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப் பயணமாக, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். நேற்று கோவை வ.உ.சி மைதானத்தில் உள்ள, அகழ்வாராய்ச்சி கண்காட்சி மையத்தை துவக்கி வைத்தார்.  இதையடுத்து, நீலகிரி குன்னூர் பகுதியில் திறந்தவெளி வேனில் மக்களிடையே பேசிய அவர், ஒரே ஆண்டில் பல நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதனையடுத்து, உதகையில் உள்ள தமிழக மாளிகைக்கு ஓய்வு எடுக்கச் செல்லும் போது, வழியில் தோடர் இன மலைவாழ் மக்களை  சந்தித்து பேசினார். அப்போது, அவர்கள் முதல்வருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அந்த மக்களுடன் சேர்ந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை, முதல்வர் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. தொடர்ந்து அவர் இன்று, உதகையில் 124 மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here