
திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கிட்டத்தட்ட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இறந்த ஏழு பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுக்க இருப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்பிய 24 பேர் தனியார் மினி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த சமயத்தில் அவர்கள் வந்த பேருந்து பழுதாகி பாதியில் நிற்க, சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தி பழுது பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நிழலுக்காக வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த தேவகி, க/பெ.சண்முகம் (வயது 50), கலாவதி, க/பெ.குப்புசாமி (வயது 50), கீதாஞ்சலி, க/பெ.ரஞ்சித் (வயது 35)சாவித்ரி, க/பெ.குப்பன் (வயது 42), செல்வி (எ) சேட்டம்மாள், க/பெ.பழனி (வயது 55), மீரா, க/பெ.முனுசாமி (வயது 51) மற்றும் தெய்வானை, க/பெ.திலிப்குமார் (வயது 32) ஆகிய ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்றும் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.