தமிழகத்தில் இந்த தொழிலாளர்களுக்கு 20% போனஸ்..., முதல்வர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசானது பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலாளர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு போனஸை அறிவித்த முதல்வர் தற்போது தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நலன் கருதி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ரூ.14 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில் பங்காளிக்க ரூ.13.46 கோடியை வழங்க அரசே முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.