முதல்வரின் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வாக்குறுதியால் குவிந்த பெண்கள் – வதந்தியால் ஏற்பட்ட குழப்பம்!!!

0

முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அறிவித்தார். தற்போது இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பாக்கப்படுகிற நிலையில் இந்த திட்டம் குறித்த ஒரு வதந்தி பரவியுள்ளது. அதை பற்றிய செய்தியை இங்கே பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்குறித்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை திட்டம். பின்னர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்ற ஆர்வம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

 

தற்போது இது குறித்த ஒரு வதந்தி பரவியுள்ளது. அது என்னவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு இந்த ஊக்கத் தொகை அவர்களது குடும்ப அட்டைகளில் புகைப்படம் இருந்தால் மட்டுமே வழங்கப்படும் என்பதுதான் அந்த வதந்தி. இதனால் குடும்ப அட்டைகளில் புகைப்படத்தை மாற்றுவதற்காக பல பெண்கள் உணவு வழங்கல் துறை அலுவகத்திக்கும், இ-சேவை மையத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு செல்பவர்களிடம் அங்குள்ள அதிகாரிகள், தமிழக அரசு இன்னும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறினாலும் கூட அந்த பெண்கள் கேட்டபாடில்லையாம். மேலும் இவ்வாறு கூட்டம் கூடுவதால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here