தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000…, முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு!!

0
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000..., முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு!!
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000..., முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு!!

தமிழக அரசானது, கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்ட நிதி உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைக்கு அதிகப்பட்ச ரூ. 50,000 வரை வைப்புத் தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ஒருவேளை, அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 என வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் படி, அந்த பெண் குழந்தை 18வயது வரை திருமணம் செய்யாமல் இருந்தால் மட்டுமே முதிர்வு தொகையை பயனாளி எடுத்துக்கொள்ள முடியும். இதில், 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், 18 வயது நிறைவடைந்ததும், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள். இதனை பெறுவதற்காகவே, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஜூன் வரை சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2வது செவ்வாய்க்கிழமைகளில் நடக்கவுள்ளது. இந்த முகாம்களை பயன்படுத்தி முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளாமல் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnsocialwelfare.tn.gov.in/en/specilisationschild-welfare/chief-ministers-girl-child-protection-scheme என்ற தளத்தில் காணலாம்.

கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? வெளியான ஹாட் நியூஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here