தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டு படுத்துவதற்காகவும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்காகவும் போக்குவரத்து காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், குறிப்பாக சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம், வாகன ஒட்டிகளுக்கான விதிமுறைகளையும் காவல்துறை விதித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சென்னையில்,
- கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி. மீ. வேகத்திலும்,
- பேருந்து, லாரிகள், டிரக்குகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மணிக்கு 50 கி. மீ. வேகத்திலும்,
- ஆட்டோக்கள் மணிக்கு 40 கி. மீ. வேகத்திலும்,
- குடியிருப்பு பகுதிகளுக்குள் 30 கி. மீ. வேகத்திலும் செல்ல வேண்டும் என புதிதாக வேக வரம்பை பெருநகர காவல்துறை விதித்துள்ளது.
இந்த வேக கட்டுப்பாடு வரும் நவம்பர் 4 ஆம் தேதி அமலாக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், இந்த விதியை மீறுபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.., எந்த மாவட்டங்களில் தெரியுமா??