தமிழகத்தின் இந்த பகுதியில் இரவு நேர பேருந்து சேவையை அதிகரிக்க கோரிக்கை., அரசிடம் வேண்டுகோள்!!

0
தமிழகத்தின் இந்த பகுதியில் இரவு நேர பேருந்து சேவையை அதிகரிக்க கோரிக்கை., அரசிடம் வேண்டுகோள்!!

சென்னையில் இரவு நேரங்களில், தற்போது உள்ளதை காட்டிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, போக்குவரத்து துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் கோரிக்கை:

தமிழகத்தின் பெரும்பாலான பயணிகள், பொதுப் போக்குவரத்திற்கு பேருந்து சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் பொது போக்குவரத்துக்கான தேவை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுகுறித்து சென்னை நகரவாசிகள் போக்குவரத்து துறைக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது வெளியூர் சென்று திரும்புவோர் மற்றும் பணிக்காக வெளியில் செல்வோர் ஆகியோர் சென்னைக்கு திரும்ப ஏதுவாக, இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த மூலிகை எண்ணெய் ஒன்று போதும்.., இனி உங்க முடியின் வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது!

இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அதிகாரிகள், மாநகரம் முழுவதும் இயங்கும் 3000 பேருந்துகளில் இரவு நேரத்தில் மட்டும் 110 க்கும் மேற்பட்ட இயக்கப்படுவதாகவும், தேவை இருக்கும் எனில் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். இதனால் விரைவில், பயணிகளின் இந்த கோரிக்கை குறித்து அரசு முடிவெடுக்கும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here