
மத்திய அரசானது குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக, பேரிடர் காலங்களில் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கி வருகிறது. ஆனால், இந்த குறுவை சாகுபடி கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் செய்யபடவில்லை என்பதால், தமிழக விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று பதிவானது.

விசாரணைக்கு வரப்பட்ட இந்த வழக்கிற்கு நீதிபதிகள், விவசாயிகளுக்கான அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும். இதனால், தமிழகத்தில் குறுவை, சம்பா பருவம் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது வரையிலான கால அட்டவணையை விரைவில் தயார் செய்து, தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய வேளாண் துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்னர்.