தமிழக பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழக பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் - போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்துக் கழகங்களின் மூலம் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும், இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படும் என போக்குவரத்து துறை  அமைச்சர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று, நடைபெற்ற போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதன்படி, தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களின் மூலம் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும்  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு, அரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, இனி 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here