தமிழக அரசுடன் இணைந்து போக்குவரத்து துறையானது, பொது மக்களின் வசதிக்காக வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் வழங்குவதுடன், மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தையும் சிறப்பாக வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, பொது மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தையும் குறைத்துள்ளது. அதாவது, கோவை மாவட்டம் வால்பாறையின் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திருப்பூர், கோவை, சேலம் மற்றும் கேரள மாநிலம் மன்னார்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்வதற்கான அரசு பேருந்தில் ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அரசு பேருந்தை கூலி தொழிலாளிகள் தான் அதிகம் பயன்படுத்துவதை அறிந்த அரசு, சாதாரண கட்டணம் என்ற பெயர் பலகையுடன் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் இனிமேல் ரூ.48 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், எஸ்டேட் பகுதிகளில் இருந்து வரும் அரசு பேருந்துகளில் சாதாரண கட்டணம் என்ற பெயர் பலகை இல்லையெனில் வழக்கம்போல ரூ.64 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.